ஆசிட் விற்பனையை சரிபார்க்க தீபிகா படுகோனே-இன் சோதனை வீடியோ பதிவு

தொடர்ந்து பெண்கள் மீதான ஆசிட் வீச்சு சம்பவங்கள் நடந்து வரும் வேளையில் நாட்டில் தடை இருந்தும் எவ்வளவு எளிதில் ஆசிட் பாட்டில்களை வாங்க முடிகிறது என்பதைக் காட்டுகிறது தீபிகா படுகோனின் வீடியோ பதிவு.

நடிகை தீபிகா படுகோனின் தயாரிப்பிலும் நடிப்பிலும் உருவாகி சமீபத்தில் வெளியான பாலிவுட் திரைப்படம் ‘சப்பக்’.

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் உண்மை வாழ்க்கைக் கதையை இத்திரைப்படம் காட்டுகிறது.

இதில் பாதிப்புக்குள்ளான பெண்ணாக நடித்திருந்தார் தீபிகா.

சமீபத்தில் கூட ஆசிட்வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் தெருவில் நடந்து செல்லும் போது இந்த சமூகம் அவளைப் பார்க்கும் விதத்தை தானே முன் சென்று வீடியோ பதிவாக்கினார் தீபிகா.

Deepika Padukone conducts Chhapaak social experiment to check sale of acid

தற்போது தனது குழுவினருடன் சென்று மும்பை நகருக்குள்ளேயே எவ்வளவு எளிதில் ஆசிட் வாங்க முடிகிறது என்பதைக் காட்டும் முயற்சியை தீபிகா மேற்கொண்டார்.

ரகசிய கேமிரா மூலம் நடிகர்கள் மாறு வேடமிட்டு கடைகளுக்குச் சென்று ஆசிட் வாங்குவது படமாக்கப்படுகிறது.

பல கடைகளிலும் எளிதில் ஆசிட் வாங்க முடிந்தது. யாரும் எவ்வித பாதுகாப்பு அல்லது தடை அல்லது சட்ட நடைமுறைகளை மதிக்கவே இல்லை.

அந்த வீடியோ காட்சியில் ஒரேயொரு கடைக்காரர் மட்டும் ஏன் ஆசிட் வாங்குகிறாய்? பெண்ணின் மீது வீசவா? உன் ஐடி கார்டு வேண்டும் எனக் கூற அதற்கு மாறுவேடத்தில் இருந்த துணை நடிகர் மறுக்க ஆசிட் தர மறுக்கிறார் அந்தக் கடைக்காரர்.

சட்டத்துக்குப் புறம்பாக நடக்கும் ஆசிட் விற்பனையை நிறுத்த இந்த சமூகம் ஒன்று சேர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறார் தீபிகா படுகோன்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே