கொரோனா விழிப்புணர்வு : தனது பெயரை மாற்றிய ஜீவா!

பிரபல நடிகரான ஜீவா தனது ட்விட்டர் கணக்கின் பெயரை மாற்றியுள்ளார்.

கொரோனா வைரஸ் வேகமாக இந்தியாவில் பரவி வருகிறது. இதுவரை 900-க்கும் அதிகமானோர் இந்தியா முழுவதும் இந்த வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் 42 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் வைரஸ் பரவாமல் தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு ஏப்ரல் 14-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மற்றும் முதல்வர் ஆகியோர் தேவையில்லாமல் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

அரசின் இந்த அறிவிப்பை திரைத்துறை பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களின் வாயிலாக விழிப்புணர்வு பிரசாரமாக முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் நடிகர் ஜீவா தனது ட்விட்டர் கணக்கின் பெயரை ‘உள்ளே போ’ என்று மாற்றியுள்ளார்.

ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியில் சுற்றும் நபர்களுக்கு கூறும் அறிவுரையாக இந்தப் பெயர் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே