இந்திய பங்குச்சந்தைகள் கடந்த மூன்று தினங்களாக ஏற்றம் கண்ட நிலையில் வர்த்தக வாரத்தின் நான்காம் நாளான இன்று(ஆக.,20) சரிவுடன் வர்த்தகத்தை துவங்கின.

சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி கண்டன.அமெரிக்க பெடரல் வங்கியின் நிதிநிலை கூட்டம் நேற்று நடந்தது.

இதில் கொரோனா பிரச்னையால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என்றும், இதிலிருந்து மீண்டும் வருவது சற்று கடினம் என தெரிவிக்கப்பட்டது.

இதன் பாதிப்பு உலக சந்தைகளில் எதிரொலித்தது. ஷாங்காய், ஹாங்காங் டோக்கியோ உள்ளிட்ட ஆசியாவின் பிற பங்குச்சந்தைகளும் சரிவை சந்தித்ததாலும் இந்திய பங்குச்சந்தைகள் சரிவை கண்டன.

மேலும் முதலீட்டாளர்கள் கடந்த கால வர்த்தகத்தில் காணப்பட்ட ஏற்றத்தை கருத்தில் கொண்டு லாபநோக்கத்தோடு அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததாலும், ரூபாயின் மதிப்பு சரிவாலும் இன்றைய வர்த்தகம் சரிய காரணமாக அமைந்தது. 

இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 344.53 புள்ளிகள் சரிந்து 38,270.26ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 92.80 புள்ளிகள் சரிந்து 11,315.60ஆகவும் வர்த்தகமாகின.

தொடர்ந்து காலை 11 மணியளவில் சென்செக்ஸ் 310, நிப்டி 75 புள்ளிகள் சரிந்து வர்த்தகத்தை தொடர்ந்தன.

ரூபாயின் மதிப்பும் சரிவுபங்குச்சந்தைகள் போன்று ரூபாயின் மதிப்பும் சரிந்தது. அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ.75.03ஆக வர்த்தகமானது.

கச்சா எண்ணெய் விலை சரிவுசர்வதேச சந்தையில் இன்றைய கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 0.75 சதவீதம் குறைந்து 45.03 அமெரிக்க டாலருக்கு விற்பனையானது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே