பாஜகவில் இணைந்த திரிணாமூல், இடதுசாரி கட்சிகளின் 9 எம்.எல்.ஏக்கள்..!!

திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய சுவேந்து அதிகாரி மேற்கு வங்கத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

மேற்கு வங்க மாநில முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சுவேந்து அதிகாரி கட்சியின் அடிப்படை பதவியிலிருந்து ராஜிநாமா செய்தார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவா்களுக்கும் சுவேந்து அதிகாரிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கடந்த நவம்பர் 27ஆம் தேதி போக்குவரத்துத் துறை அமைச்சர் பதவியையும், டிசம்பர் 16-ஆம் தேதி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியையும் ராஜிநாமா செய்தார்.

இந்நிலையில் மேற்கு வங்கத்தில் இரண்டு நாள்கள் பயணம் மேற்கொண்டுள்ள அமித் ஷா பொதுமக்களை சந்தித்து கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.

இதனிடையே மிட்னாபூர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் அமித் ஷா முன்னிலையில், சுவேந்து அதிகாரி பாஜகவில் இணைந்தார்.

மேலும் திரிணமூல் காங்கிரஸிலிருந்து விலகிய முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏக்களும் பாஜகவில் இணைந்தனர்.

அதன்படி தாப்சி மோண்டல், அசோக் திண்டா, சுதீப் முகர்ஜி, சாய்காந்த் பஞ்சா, ஷில்பத்ரா டுட்டா, திலிப் பிஸ்வாஸ், சுக்ரா முண்டா, பிஸ்வாஜித் குண்டு மற்றும் பனாசீர் மைதி ஆகியோரும் பாஜகவில் இணைந்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே