டெல்லியில் துப்பாக்கிச்சூடு; ஐ.எஸ்.பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த ஒருவர் கைது

தலைநகர் டெல்லியில் ஐ.எஸ் தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் சுதந்திர தின விழா இந்தியாவில் கொண்டாடப்பட்ட நிலையில் பயங்கரவாதிகள் நாட்டுக்குள் ஊடுறுவ திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரித்திருந்தது.

இந்நிலையில் டெல்லியில் ஐ.எஸ் தீவிரவாத நடமாட்டம் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள தவுலா குவான் பகுதியில் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த ஒருவரை போலீஸார் சுட்டுப் பிடித்துள்ளனர்.

அவரிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள், வெடிக்குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே