“இன்று நள்ளிரவு முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு” – சுகாதாரத்துறை இணை செயலர்

கண்ணுக்கு தெரியாத கரோனா வைரஸ் மனித சமூகத்திற்கும் நவீன அறிவியலுக்கும் சவால் விட்டுக்கொண்டிருக்கிறது.

இதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் வல்லரசு நாடான அமெரிக்கா உட்பட பொருளாதாரத்தில் முன்னேறிய அனைத்து நாடுகளும் திணறி வருகின்றன.

உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,30,856 என்ற அளவிலும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,60,754 என்ற அளவிலும் இருக்கிறது.

இந்த வைரஸ் பரவலை தடுப்பதற்கான ஒரே வழி சமூக விலகல் என்பதால் அனைத்து நாடுகளும் அதையே வலியுறுத்தி வருகின்றன.

இந்தியாவிலும் கரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மே 3 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கரோனா பாதிப்பு குறைவாக உள்ள இடங்களில் இன்று நள்ளிரவு முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட உள்ளதாக சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு எந்தவிதமான தளர்வுகளும் வழங்கப்பட மாட்டாது என்று சுகாதார அமைச்சகம் கூறியதுடன், ஏப்ரல் 20-க்குப் பிறகு இதுபோன்ற பகுதிகளில் கடுமையான பூட்டுதல் நடவடிக்கைகளை அரசாங்கம் விதிக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.

Maharashtra3,6483,072365211
Delhi1,8931,64320743
Gujarat2281,6041,452194558
Rajasthan801,4311,2045205122
Madhya Pradesh1,4021,20612769
Tamil Nadu1,37299236515
Uttar Pradesh97485210814
Telangana80960518618
Andhra Pradesh446475652365117
Kerala3991402572
Karnataka438827010414
Jammu and Kashmir341285515
West Bengal2331023676212
Haryana1424613941043
Punjab2341873116
Bihar69248422
Odisha6136241
Uttarakhand42339
Himachal Pradesh3921162
Jharkhand538362
Chhattisgarh361125
Assam3421121
Chandigarh23149
Ladakh18414
Andaman and Nicobar Islands115411
Meghalaya11101
Goa717
Puducherry734
Manipur211
Tripura211
Arunachal Pradesh11
Mizoram11
Nagaland11
Total40516,12813,093412,5077528

மேலும் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1334 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 27 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே