பீகார் மாநிலத்தில் ஜூலை 16 முதல் 31ஆம் தேதி வரை ஊரடங்கு

பிகார் மாநிலத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், அந்த மாநிலத்தில் ஜூலை 16 முதல் 31 வரை மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறது.

இந்த காலக்கட்டத்தில் அவசரகால உதவிகளும், அத்தியாவசிய சேவைகளும் மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாட்னாவில் பிகார் அரசின் முதன்மைச் செயலாளர் தலைமையில் இன்று நடைபெற்ற உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 75 பாஜக தலைவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாட்னாவில் உள்ள பாஜக தலைமையகத்தில் நேற்று நூறுக்கும் மேற்பட்ட பாஜகவினருக்கும் தலைமையகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

100 பேருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் 75 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே