நவம்பர் 30 -ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு..!!

நாடு முழுவதும் நவம்பர் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. பொருளாதார நடவடிக்கைகளுக்காக ஊரடங்கில் மத்திய அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது.

அந்தவகையில் அக்டோபர் 31ம் தேதி வரை இருந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.

மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கு எவ்வித கட்டுப்பாடு, முன்னனுமதி பெற அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 30ம் தேதி வெளியான கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் நவம்பர் 30 வரை பொருந்தும் என்றும் அரசு விளக்கமளித்துள்ளது. 

மத்திய அரசை ஆலோசிக்காமல் மாநில அரசு தன்னிச்சையாக கட்டுப்பாடு விதிக்கக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது. முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே