வெங்காயம் கிலோவுக்கு ரூ.45க்கு விற்க கடலூர் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு..!!

கடலூரில் வெங்காய விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.

மழை காரணமாக வரத்து குறைவால் தமிழகம் முவழுவதும் வெங்காய விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

இந்த விலை உயர்வை கட்டுப்டுத்தும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

முதற்கட்டமாக பண்ணை பசுமை கடைகளில் வெங்காயம் கிலோ ரூ.45க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் எகிப்து வெங்காயமும் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த வெங்காயமானது கிலோ ரூ.60க்கு விற்பனையாகி வருகிறது.

இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் 3 நாள்களில் கிலோவுக்கு ரூ.45க்கு வெங்காயம் விற்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

21 அம்மா சிறப்பு அங்காடி, சரவணபவ கூட்டுறவு அங்காடியில் விற்பதற்காக 10 டன் வெங்காயம் கொண்டுவரப்படுகிறது என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் மக்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே