கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பா் கிங்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 53-ஆவது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்-சென்னை சூப்பா் கிங்ஸ் அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன.
அபுதாபியில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.
இந்த ஆட்டம் பஞ்சாப் அணிக்கு வாழ்வா, சாவா ஆட்டமாகும். இதுவரை 13 ஆட்டங்களில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி 6 வெற்றிகளைப் பெற்றுள்ளது.
அந்த அணி இந்த ஆட்டத்தில் சென்னையை வீழ்த்தும்பட்சத்தில் 7-ஆவது வெற்றியைப் பெற்று 14 புள்ளிகளுடன் பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளும்.
மாறாக தோற்கும்பட்சத்தில் ஐபிஎல் போட்டியிலிருந்து வெளியேற நேரிடும். அதேநேரத்தில் சென்னை அணி ஏற்கெனவே பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது.
எனினும் இந்த சீசனின் கடைசி ஆட்டத்தை வெற்றியோடு முடிக்க அந்த அணி விரும்பும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
அதனால் பஞ்சாப் இந்த ஆட்டத்தில் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும்.