ஊருக்குள் புகுந்த முதலை..; மடக்கிப் பிடித்த மக்கள்..!!

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே 300 கிலோ எடை கொண்ட ராட்சத முதலை ஊருக்குள் புகுந்தது.

கொள்ளிடம் ஆற்றில் இருந்து சித்தமல்லி கிராமத்திற்குள் புகுந்த முதலையை அப்பகுதி இளைஞர்கள் கயிறு மூலம் கட்டி வைத்தனர்.

இந்நிலையில் முதலையைப் பார்க்க அங்கு ஏராளமானோர் திரண்டுள்ள நிலையில், ஆபத்தை உணராமல் அதனை கிராம இளைஞர்கள் சீண்டி விளையாடினர்.

மேலும் தகவல் அளித்து பல மணி நேரமாகியும் வனத்துறையினர் வராததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே