ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் வி மருந்தை இந்தியாவில் தயாரிப்பதற்காக சீரம் நிறுவனத்துக்கு மருந்து தரக்கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதியளித்துள்ளது.

ஸ்புட்னிக் வி மருந்தை ஆய்வு செய்யவும் பரிசோதிக்கவும் உரிமம் பெற்று உற்பத்தி செய்யவும் சீரம் நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது.

புனே அருகில் உள்ள ஹடப்சர் பகுதியில் இதற்கான பணிகள் தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாக்டர் ரெட்டிஸ் லேபராட்டரிஸ் நிறுவனம் மூலமாக ஸ்புட்னிக் வி மருந்து விநியோகிக்கப்படும் என்றும் பரிசோதனை முறையில் மாநகராட்சிக்கு விநியோகம் செய்யப்பட உள்ளதாகவும் மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே