சீனாவின் வூகான் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் கேரள மாணவருக்கு கொரானா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சீனாவின் வூகான் பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர்களும் பயின்று வருகின்றனர்.

கேரளாவிலிருந்து சென்று அங்கு பயின்று வரும் மாணவர் ஒருவர், அண்மையில் சொந்த ஊர் திரும்பியுள்ளார்.

காய்ச்சல், ஜலதோஷம் உள்ளிட்ட அறிகுறிகளுடன் இருந்த அந்த இளைஞர், மருத்துவமனையில் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தார்.

இந்நிலையில், அந்த இளைஞருக்கு கொரானா வைரஸ் தொற்றியிருப்பது மருத்துவ சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவில் 170-க்கும் மேற்பட்டோரை பலி கொண்டுள்ள கொரானா வைரஸ், இந்தியாவிற்கும் பரவியுள்ளது.

பாதிக்கப்பட்ட நபரின் ஊர், பெயர் உள்ளிட்ட விவரங்கள் வெளியாகவில்லை.

கொரானா வைரஸ் ஏற்கெனவே 15-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ள நிலையில், தற்போது இந்தியாவுக்கும் பரவியுள்ளது.

சீனாவில் இருந்து திரும்பிய 430 பேர் கேரளத்தில், தனி வார்டில் வைத்து கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த மாநிலத்தில்தான் கொரானா வைரஸ் பாதிப்பு முதன்முதலில் கண்டறியப்பட்டுள்ளது.

இதை சுகாதாரத்துறையும் உறுதிப்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே