கேரளாவில் 3 வயது குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது.

சீனாவில் ஹூபெய் மாகாணம் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் 31 மாகாணங்களுக்கு வேகமாக பரவியது.

இந்த வைரசால் தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் கூடிக்கொண்டே சென்றது.

சில நாட்களுக்கு முன்பு பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 500-ஐ தாண்டியது.

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மேலும் 22 பேர் இன்று பலியாகியுள்ளனர். இதையடுத்து பலியானோர் எண்ணிக்கை 3,119 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், துபாயில் இருந்து கேரளா வந்த 3வயது குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பெருக்கு ஏற்கனவே கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கேரளாவில் மேலும் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

விமான நிலைய மருத்துவர்கள் உறுதி பெற்றோரின் ரத்தமாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே