மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு கொரோனா..

மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று  பரவல் முன்பைவிட பலமடங்கு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் அதிகபட்ச பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 

மேலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் என உயர் பதவியில் உள்ளவர்களும் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மருத்துவமனையில்  கஜேந்திர சிங் ஷெகாவத் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், தொற்று பாதிப்பு குறித்து தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும் மருத்துவர்கள் ஆலோசனைப்படி நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். 

கடந்த காலங்களில் என்னை சந்தித்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே