தமிழகத்தில் தினமும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதை பார்க்கும் போது மீண்டும் முழு ஊரடங்கா பிறப்பிக்கப்படும் சூழல் உருவாகும் என அஞ்சப்படுகிறது.

இன்று ஒரே நாளில் அண்டை மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் உட்பட 836 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாக இந்த அளவுக்கு தினசரி பாதிப்பு இருந்ததில்லை.

ஆனால் கடந்த ஒரு வாரமாக தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இதே போன்ற எண்ணிக்கையில் தான் மெல்ல மெல்ல கொரோனா பரவத் தொடங்கியது.

பின்னர் அது உச்சத்தை எட்டியதை அனைவரும் அறிவார்கள். ஆனால் அப்போது உரிய விழிப்புணர்வு நம்மிடம் இல்லை.

கடந்த ஆண்டு உலுக்கிய கொரோனா மூலம் நாம் பாடம் கற்றுக் கொண்டுள்ளோம் என்பதால் போதிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மத்திய,மாநில அரசுகள் அறிவுறுத்துகின்றன. ஆனால் அப்படி இல்லாத பட்சத்தில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்பு இருக்கிறது.

அதனால் மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.

அதே போல் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள மக்கள் முன்வர வேண்டும் என்றும் மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் ஒரே நாளில் 836 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,60,562ஆக அதிகரித்துள்ளது. 5149 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 12,551 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே