ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற 4 பேர் கைது..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை அதிக விலைக்கு விற்பனை செய்த இரண்டு மருத்துவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

செம்பாக்கத்தில் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு ஆய்வாளர் விநாயகம் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஆயிரத்து 568 மதிப்புள்ள ஒரு குப்பி ரெம்டெசிவிர் மருந்தை 22 ஆயிரம் ரூபாய்க்கு கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய முயன்ற தனியார் மருத்துவமனை மருத்துவர் தீபன் மற்றும் அவருக்கு அந்த மருந்தை19 ஆயிரம் ரூபாய்க்கு வழங்கிய மருந்தக ஊழியர் நரேந்திரனரை கைது செய்தனர்.

இதேபோல் பழைய பல்லாவரத்தில் ஒரு குப்பி ரெம்டெசிவிர் மருந்தை 11,500 ரூபாய்க்கு விற்பனை செய்த தனியார் மருத்துவமனை மருத்துவர் ஜான்கிங்லி மற்றும் மருந்தக உரிமையாளர் பெருமாள் ஆகிய இருவரை கைது செய்த போலீசார், தொடர்புடைய மேலும் இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே