தமிழகத்தில் இன்று 669 பேருக்கு கொரோனா உறுதி..!

தமிழகத்தில் புதிதாக 669 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தரவுகளை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

இதன்படி, தமிழகத்தில் புதிதாக 669 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 412 பேர் ஆண்கள், 257 பேர் பெண்கள். இதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 7,204 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 3 பேர் பலியானதையடுத்து, மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே