முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திடீர் நெஞ்சு வலியால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் நெஞ்சுவலி காரணமாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சார்பில் 2004 முதல் 2014ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் நாட்டின் பிரதமராக இருந்தவர் டாக்டர் மன்மோகன் சிங். பொருளாதார நிபுணரான இவர் ரிசர்வ் வங்கி ஆளுநராகவும் இருந்துள்ளார்.

90களில் முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் அமைச்சரவையில் நிதியமைச்சராகவும் பொறுப்பில் இருந்துள்ளார்.

87 வயதாகும் மன்மோகன் சிங் டெல்லியில் வசித்து வருகிறார். இன்று இரவு அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. 

இதையடுத்து உடனடியாக மன்மோகன் சிங் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பிரிவில்அனுமதிக்கப்பட்டுள்ள மன்மோகன் சிங்கின் உடல் நிலையை மூத்த மருத்துவர்கள் கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மன்மோகன் சிங் அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து பல்வேறு அரசியல் கட்சியினர் நலம் விசாரித்து வருகிறார்கள்.

அவர் மீண்டும் நல்ல உடல் நலத்துடன் திரும்ப வேண்டும் என்று பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே