சென்னையில் மண்டல வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விவரம் வெளியீடு..

சென்னையில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,330 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 571 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக கோடம்பாக்கத்தில் அதிக பாதிப்பு இருந்த நிலையில் ஒரேநாளில் ராயபுரத்தில் 81 பேருக்கு தொற்று உறுதியானதை அடுத்து அதிக பாதிப்பில் ராயபுரம் முதலிடத்தில் உள்ளது.

இதில், கோடம்பாக்கம் மண்டலத்தில் 563 பேரும், திருவிக மண்டலத்தில் 519 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க நகர் ஆகிய 3 மண்டலங்களும் கருஞ்சிவப்பு மண்டலமானது.

மண்டலவாரியாக பாதிப்பு எண்ணிக்கை

திருவொற்றியூர் -64
மணலி – 27
மாதவரம் – 46
தண்டையார்பேட்டை – 231
ராயபுரம் -571
திரு.வி.க. நகர் – 519
அம்பத்தூர் – 167
அண்ணா நகர் -248
தேனாம்பேட்டை -360
கோடம்பாக்கம் -563
வளசரவாக்கம் -274
ஆலந்தூர் -25
அடையாறு – 159
பெருங்குடி -35
சோழிங்கநல்லூர் -25
பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர் -16

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே