இந்தியாவில் 2.16 பேருக்கு கொரோனா பாதிப்பு…!

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 2,16,919-ஆக அதிகரித்துள்ளது.

வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 9,304 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.

இது முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையாகும்.

நாட்டில் தொடா்ந்து 5-ஆவது நாளாக தினசரி பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு 9,304-ஐ கடந்துள்ளது.

கரோனாவால் மேலும் 260 பேர் உயிரிழந்தையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 6,075-ஆக உயா்ந்துள்ளது.

இதுவரை பாதிக்கப்பட்டவா்களில் 1,06,737 பேர் சிகிச்சையில் உள்ளனா். 1,04,107 பேர் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவல்படி, வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில் 260 உயிரிழப்புகள் நேரிட்டன.

இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 122 பேர் உயிரிழந்தனா், 74,860 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து 32,329 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் 25872 பேருக்கும், தேசிய தலைநகர் தில்லியில் 23,645 பேருக்கும், குஜராத்தில் 18,100 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்றை கண்டறிவதற்காக, நாடு முழுவதும் இதுவரை 42,42,718 ஆா்டி-பிசிஆா் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 1,39,485 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

நாட்டில் கரோனா பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக, 480 அரசு ஆய்வகங்களும் 208 தனியாா் ஆய்வகங்களும் செயல்படுகின்றன.

தற்போது நாளொன்றுக்கு சராசரியாக 1.4 லட்சம் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான வசதிகள் உள்ளன. இதனை 2 லட்சமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கரோனா சிகிச்சைக்காக, நாடு முழுவதும் 1,66,332 தனிமை படுக்கைகளுடன் 952 பிரத்யேக மருத்துவமனைகள் செயல்படுகின்றன என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே