உலகளவில் பல்வேறு நாடுகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 773 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதன்மூலம் இந்தியாவில் கொரோனா தொற்றினால் 5,194 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 149 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் 402 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தை பொருத்தவரை 690 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 8 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

சென்னை மாநகரத்தை பொறுத்தவரை 149 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

சென்னையில் 15 மண்டலங்கள் உள்ளன.

அதில் எத்தனை பேர் எங்கெங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற பட்டியல் விவரம் :

திருவொற்றியூர் – பாதிக்கப்பட்டவர்கள் 4 பேர்..
மணலி – …( பாதிப்பு ஏதும் இல்லை)
மாதவரம் – பாதிக்கப்பட்டவர்கள் 3 பேர்..
தண்டையார்பேட்டை – பாதிக்கப்பட்டவர்கள் 12 பேர்..
ராயபுரம் – அதிகபட்சமாக 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்..
திருவிக நகர் – பாதிக்கப்பட்டவர்கள் 22 பேர்..
அம்பத்தூர் – …( பாதிப்பு ஏதும் இல்லை)
அண்ணாநகர் – பாதிக்கப்பட்டவர்கள் 15 பேர்..
தேனாம்பேட்டை – பாதிக்கப்பட்டவர்கள் 11 பேர்..
கோடம்பாக்கம் – பாதிக்கப்பட்டவர்கள் 19 பேர்..
வலசரவாக்கம் – பாதிக்கப்பட்டவர்கள் 4 பேர்..
ஆலந்தூர் – பாதிக்கப்பட்டவர்கள் 2 பேர்..
அடையார் – பாதிக்கப்பட்டவர்கள் 4 பேர்..
பெருங்குடி – பாதிக்கப்பட்டவர்கள் 5 பேர்..
சோழிங்கநல்லூர் – பாதிக்கப்பட்டவர்கள் 2 பேர்..
மற்ற மாவட்டங்களோடு தொடர்புடையவர்கள் 6 பேர்..பாதிக்கப்பட்டவர்கள்..

தமிழகத்தில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியில் சென்னை மாநகரம் முதலிடத்தில் உள்ளது.

இதனால் சென்னை முழுவதும் கொரோனா பரிசோதனை நடத்த தமிழக அரசு முடிவெடுத்து சோதனையானது நடைபெற்று வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே