சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 336 குறைந்து, ரூ. 35,528-க்கு விற்பனையாகிறது.

கொரோனா ஊரடங்கு, அதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது.

அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. 

ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் புதிய உச்சத்தை உச்சத்தை தொட்ட தங்கம் விலை மீண்டும் படிப்படியாக குறையத் தொடங்கியது.

இந்நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 336 குறைந்து, ரூ. 35,528-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராமுக்குக் ரூ. 42 குறைந்து ரூ. 4,441 என்று விற்பனை செய்யப்படுகிறது.

இதே போல் வெள்ளியின் விலை ரூ. 200 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.72-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 72,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே