மாஸ்க் அணிவதை அடுத்த ஒரு மாதத்திற்கு கட்டாயம் பின்பற்றினால் கொரோனா பரவலை தடுக்கலாம் – ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில், சென்னை அம்மா மாளிகையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் ;

மக்கள் முகக்கவசம் அணிவதால் பல்வேறு பகுதிகளில் தொற்று குறைந்துள்ளது.

சென்னையில் 8,405 பேர் மட்டுமே கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது.

அடுத்த 1 மாதம் அனைவரும் முகக்கவசம் அணிந்தால் தான் தொற்றை கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

சென்னையில் தேடிச்சென்று கொரோனா பரிசோதனைகள் செய்கிறோம். சிகிச்சையளிக்க போதிய படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை பார்த்து அச்சம் வேண்டாம். தேடி தேடி பரிசோதனை நடத்துவதால் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு.

மக்களிடம் அச்சம் வேண்டாம்; மக்களிடம் இருந்து ஆக்க பூர்வமான ஆதரவு வேண்டும். அடிக்கடி கைகழுவும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே