மேற்கு வங்கத்தில் ஜூன்-1 முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு..! – முதல்வர் மம்தா பானர்ஜி

மேற்குவங்கத்தில் ஜூன் 1ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும் என்று முதல்வர் மம்தா பேனர்ஜி அறிவித்துள்ளார்.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா தற்போது உலகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அதன் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இத்தகைய கொடிய வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை.

இந்தியாவிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது.

ஊரடங்கால் பொதுப்போக்குவரத்த்து, தொழில்கள் போன்ற மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. மேலும் நாடு முழுவதுமே திருக்கோயில்களில் வழிபாடுகள் நிறுத்தப்பட்டன.

வழக்கமான பூஜைகள் மட்டுமே நடைபெற்றுவந்தாலும், பக்தர்கள் அதில் கலந்துகொள்ள முற்றிலும் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது, மெல்ல மெல்ல ஊரடங்கு தளர்வுகள் செய்யப்பட்டு வருகிற நிலையில், சில மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் பொதுப் போக்குவரத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல, ஒருசில மாநிலக் கோயில்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய வழிபாட்டுக்கும் அனுமதி வழங்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில் மேற்குவங்கத்தில் ஜூன் 1ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும் என்று முதல்வர் மம்தா பேனர்ஜி அறிவித்துள்ளார்.

வழிபாட்டுத் தலத்துக்குள் ஒரே நேரத்தில் 10 பேர் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்படும் என கூறினார்.

மேலும் ஜூன் 8-ம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 100 சதவிகித ஊழியர்களுடன் இயங்கும்.

மேற்கு வங்கத்தில் அம்பன் புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 98-ஆக அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே