கொரானா வைரஸ் : மக்கள் அச்சப்பட தேவையில்லை – பிரதமர் மோடி

கொரானா வைரஸ் குறித்து நாட்டு மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் இன்று அவர் வெளியிட்ட பதிவுகளில், அச்சத்துக்கு நோ சொல்லும்படியும், முன்னெச்சரிக்கைக்கு யெஸ் சொல்லும்படியும்  குறிப்பிட்டுள்ளார்.

வரும் நாள்களில் மத்திய அமைச்சர்கள் வெளிநாடுகளில் பயணம் செய்ய மாட்டார்கள் என்றும்; அதேபோல் அத்தியாவசியமில்லாத பயணத்தை தவிர்க்கும்படி நாட்டு மக்களை வலியுறுத்துவதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார். 

பெரிய அளவில் கூட்டம் கூடும் இடங்களை பொதுமக்கள் தவிர்க்க வேணடும் என கூறியுள்ள அவர், கொரோனா வைரஸ் குறித்து பதற்றம் தேவையில்லை, முன்னெச்சரிக்கையாக நடந்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே