சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி – ஜன.1 முதல் முன்பதிவு..!!

15 முதல் 18 வயது சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஜனவரி 1 முதல் முன்பதிவு செய்யலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா தடுப்பூசிக்கான கோவின் (CoWIN) செயலியில் முன்பதிவு செய்யலாம் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஆதார் அட்டை இல்லாதவர்கள் 10ஆம் வகுப்பு அடையாள அட்டையை காட்டி தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 15 முதல் 18 வயது வரையுள்ளவர்களுக்கு வரும் ஜனவரி 3ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட உள்ளது.

இந்தியாவில் ஏற்கனவே ஒருபுறம் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணி என்பது மிக தீவிரமாக நடந்து வரும் நிலையில் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணி ஜனவரி 3ஆம் தேதி முதல் தொடங்கும் என பிரதமர் மோடி அண்மையில் அறிவித்தார். அதற்கான பணிகளை தற்போது மாநில அரசுகள் துரிதப்படுத்தியுள்ள நிலையில் இதற்கான முன்பதிவு ஜனவரி 1ஆம் தேதி தொடங்கும் என்று ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜனவரி 1ஆம் தேதி முதல் 15 முதல் 18 வயதுள்ள சிறார்கள் கோவின் இணையதளத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக முன்பதிவு செய்து கொள்ளலாம் என தற்போது ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ளது.

கோவின் இணையத்தளத்தில் 15 முதல் 18 வயதுள்ள சிறார்கள் தங்களது ஆதார் அட்டை அல்லது 10ஆம் வகுப்பு பள்ளி அடையாள அட்டையை வைத்து முன்பதிவு செய்து கொள்ளலாம். டாக்டர் ஆர்எஸ் சர்மா, கோவின் இயங்குதள தலைவர் இந்த தகவலை தற்போது அளித்துள்ளார். பல மாநிலங்களில் தற்போது ஒமிக்ரான் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு தற்போது முக்கியத்துவம் பெறுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே