சுகாதாரத்துறை தரவரிசை – தமிழகத்துக்கு 2வது இடம்..!!

நாட்டில் மாநில அளவிலான சுகாதாரத் துறைக்கான தரவரிசைப் பட்டியலை மத்திய அரசு இன்று வெளியிட்டது. அதில் தமிழகம் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

நீதி ஆயோக் வெளியிட்ட சிறந்த சுகாதாரத் துறைக்கான தரவரிசைப் பட்டியலில், நாட்டிலேயே கேரள மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் தமிழகமும், தெலங்கானா 3ஆம் இடத்திலும் உள்ளன.

கரோனா பேரிடர் காலத்தில், கடும் சவால்களை எதிர்கொண்ட சுகாதாரத் துறைக்கான பட்டியலில் இந்திய அளவில் தமிழகம் இரண்டாம் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது.

இந்தப் பட்டியலில், சிறப்பாக செயல்பட்ட மாநில சுகாதாரத்துறைகளுக்கு முன்னணி இடங்களும், மோசமாக செயல்பட்ட மாநில சுகாதாரத் துறைகளுக்கு கடைசி இடங்களும் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, உத்தரப்பிரதேச சுகாதாரத் துறைக்கு கடைசி இடம் வழங்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே