கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு மெட்ரோ ரயிலில் மாஸ்க் கட்டாயம்: பயணிகளுக்கு நிர்வாகம் அறிவுறுத்தல்

கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால், மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் ரயிலில் செல்வோர் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் என பயணிகளுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் கூறியதாவது: பொதுமக்கள் மற்றும் பயணிகள் மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழைவதற்கும் மெட்ரோ ரயில் பெட்டிகளில் பயணிப்பதற்கும் முன்பாக அனைத்து பயணிகளும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

டிக்கெட் கொடுக்கும் ஊழியர்கள் முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவத்தை பயணிகளிடம் எடுத்துரைக்க வேண்டும். மேலும், மெட்ரோ ரயில் நிலையங்களில் பொதுமக்கள் எந்த ஒரு சேவையை பயன்படுத்துவதாக இருந்தாலும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து நிலையங்களிலும் கொரோனா தடுப்பு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா 2வது அலையை தடுக்க பொதுமக்களும், பயணிகளும் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே