மறைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் மனைவி, மகனுக்கு கொரோனா..!!

கன்னட திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகராக அறியப்பட்டவர் சிரஞ்சீவி சர்ஜா. இவர் கடந்த ஜூன் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார்.

இவரது மனைவியும் பிரபல நடிகையுமான மேக்னா ராஜ், சிரஞ்சீவி சர்ஜா இறந்த சமயத்தில் கர்ப்பமாக இருந்தார்.

தொடர்ந்து அவருக்கு கடந்த அக்டோபர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் தற்போது நடிகை மேக்னாராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பெற்றோரும், நானும் எனது குழந்தையும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறோம்.

எங்களுடன் கடந்த வாரத்தில் தொடர்பில் இருந்தவர்களுக்கு இதை தெரிவிக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் மேக்னாராஜ்,’எனது ரசிகர்களும், சிருவின் ரசிகர்களும் கவலைப்பட வேண்டாம். 

இந்த வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வருவோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையறிந்த ரசிகர்கள் மேக்னாராஜின் குடும்பத்தினர் விரைவில் குணமடைய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே