கொரோனா தடுப்பு பணி : நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதியுதவி

கொரோனா தடுப்பு நிதியாக பல்வேறு பிரபலங்கள் நிதி வழங்கிவரும் நிலையில், கொரோனா தடுப்பு நிதியாக 1.30 கோடி ரூபாய் கொடுத்து அசத்தியுள்ளார் தளபதி விஜய்.

உலகை அச்சுறுத்தி கொண்டு இருக்கும் கொடிய நோயான கொரோனா வைரஸ், இந்தியாவையும் ஆட்டிப்படைக்கிறது.

நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, ஒரு மாதத்தை எட்ட உள்ளது.

மேலும் இது மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பலரும் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

நோயை கட்டுப்படுத்தவும், மக்களுக்கு உதவ மத்திய, மாநில அரசுகள் நிதி கேட்டுள்ளனர்.

பணம் படைத்தவர்கள் முதல் சாதாரண நடுத்தர மக்கள் வரை தங்களால் இயன்ற நிதி உதவியை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய், கொரோனா தொடர்பாக எந்த ஒரு அறிக்கையோ, நிதி உதவியோ அளிக்காமல் இருந்தார்.

எந்த ஒரு நிகழ்விலும் பங்கேற்காத நடிகர் அஜித்தே ரூ.1.25 கோடி நிதி அளித்து இருந்தார்.

ஆனால் சினிமா விழாக்களில் அரசியல் பேசும் விஜய், எதிர்காலத்தில் அரசியல் கனவோடு இருக்கும் அவர், எந்த உதவியும் அளிக்காமல் இருந்ததால் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் இந்த விமர்சனங்கள் எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் விஜய். 

  • பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம்,
  • தமிழக அரசுக்கு ரூ.50 லட்சம்,
  • பெப்சி அமைக்கு ரூ.25 லட்சம்,
  • கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம்,
  • ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநில முதல்வர்களின் நிவாரண நிதிக்கு தலா ரூ.5 லட்சம் என மொத்தமாக ரூ.1 கோடியே 30 லட்சம் நிதி வழங்கி உள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே