கொரோனா முதன்முதலில் கண்டறியப்பட்ட வூஹானில் முற்றிலும் இயல்பு நிலை..!

கொரோனா வைரஸ் தாக்கம் உலகெங்கும் அதிகரித்துவருகிறது. இதனை அடுத்து உலக மக்கள் அனைவரும் பீதியில் உள்ளனர்.

இதுவரை ஏழரை லட்சம் பேரை பலிவாங்கிய உள்ள கொரோனா தொடர்ந்து உலக நாடுகளில் தீவிரமடைந்து வருகிறது.

கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் 2019 டிசம்பர் மாதத்தில் சீனாவின் வூஹான் நகரிலிருந்து கொரோனா வைரஸ் பரவியது.

வூஹான் நகரில் உள்ள வைரஸ் பரிசோதனைக்கூட குளிர்சாதனப் பெட்டியின் கதவு சரியாக மூடப்படாமல் இருந்ததால் கொரோனா வைரஸ் மாதிரி, வெளியே கசிந்து உலகம் முழுவதும் பரவியது.

அப்போது சீனாவில் 70 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். 4,500 பேர் மரணமடைந்தனர் என சீனா தெரிவித்தது.

பிறகு வேகமாக ஐரோப்பாவிற்கு பரவியது. அமெரிக்காவில் தீவிரமடைந்தது.

மெல்லமெல்ல இந்தியா உள்ளிட்ட மற்ற ஆசிய நாடுகளுக்கும் பரவியது.

இதனை அடுத்து உலகில் மாஸ்க் அணியாமல் வெளியே செல்பவரே இல்லை எனலாம்.

நியூசிலாந்து போன்ற ஒரு சில நாடுகளைத் தவிர கொரோனா தாக்கத்தில் இருந்து முழுவதுமாக விடுபட்ட நாடு என்று ஒன்று இல்லவே இல்லை என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது.

இந்நிலையில் சீனாவில் படிப்படியாக கொரோனாவின் வீரியம் குறைந்து வந்தது. இதனையடுத்து அங்கு திரையரங்குகள் திறக்கப்பட்டன.

சமூக இடைவெளிவிட்டு மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளை மேற்கொள்ளத் துவங்கினார்.

தற்போது படிப்படியாக இயல்பு நிலைக்கு வூஹான் திரும்பி வருகிறது.

வூஹான் நகரில் மாயா பீச் வாட்டர் பார்க் மிகவும் பிரபலம்.

தற்போது கொரோனா குறைந்துள்ள நிலையில் அந்த வாட்டர் பார்க் திறக்கப்பட்டுள்ளது.

இங்கு பலர் வருகை புரிந்து தண்ணீரில் சாகசங்கள் செய்யும் கலைஞர்களின் நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். இவர்களில் யாருமே மாஸ்க் அணியவில்லை.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

உலகத்திற்கு கொரோனாவை கொடுத்துவிட்டு தற்போது வூஹான் நகர மக்கள் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர் என சமூக வலைதளங்களில் கொதித்து வருகின்றனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே