இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று 34 ஆயிரத்தை எட்டியது..!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,403 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 320 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,33,81,728 ஆக உள்ளது.

  • கடந்த 24 மணி நேரத்தில் 34,403 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பைவிட 4 ஆயிரம் அதிகம்.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,33,81,728 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 320 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,44,248 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • தொற்றில் இருந்து ஒரே நாளில் 37,950 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,25,98,424 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,39,056 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • நாடு முழுவதும் இதுவரை 77,24,25,744 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 63,97,972 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே