உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,10,40,619 ஆக உயர்ந்துள்ளது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

உலகம் முழுவதும் 214 நாடுகளுக்கு கரோனா நோய்த்தொற்று பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

புதன்கிழமை காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 10 லட்சத்து 40 ஆயிரத்து 619 ஆக உயர்ந்துள்ளது , அதே நேரத்தில் 3,06,25,859 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

புதன்கிழமை காலை நிலவரப்படி, தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 92,85,169 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 77,071 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

தொற்று பாதிப்பால் உலக முழுவதும் இதுவரை 11,29,591 பேர் உயிரிழந்துள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.

அங்கு இதுவரை 85,20,307 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2,26,149 பேர் உயிரிழந்துள்ளனர், அமெரிக்கா முழுவதும் 55,45,619 நோயாளிகள் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

தொற்று பாதித்தவர்களில் அதிகயளவில் குணமடைந்தவர்களின் பட்டியலில் தொடர்ந்து இந்தியா முதலிடத்தில் உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 67,92,550 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தொற்று பாதிப்பு பட்டியலில் 76,49,158 பாதிப்புகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

52,74,817 பாதிப்புகளுடன் பிரேசில் மூன்றாவது இடத்திலும், 14,31,635 பாதிப்புகளுடன் ரஷ்யா நான்காவது இடத்திலும் உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே