சென்னை – பெங்களூரு இடையே பண்டிகைக் கால ஈரடுக்கு சிறப்பு ரயில் இன்று முதல் தொடக்கம்…!!

சென்னை சென்ட்ரல் – பெங்களூரூ இடையே இன்றுமுதல் டபுள் டெக்கர் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

சென்னை சென்ட்ரலில் தினமும் காலை 7.25 மணிக்கு புறப்படும் ரயில் மதியம் 1.10 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.

அதேபோல் பெங்களூரூவில் தினமும் பகல் 2.30 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, பங்காரப்பேட், கிருஷ்ணராஜபுரம் மற்றும் பெங்களூரு கண்டோன்மெண்ட் போன்ற தடங்களில் இன்று செல்லும். இதற்கான முன்பதிவு நேற்றுமுதல் தொடங்கியது.

கொரோனா காரணமாக கடந்த பல மாதங்களாக ரயில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது . 

இதன் காரணமாக மக்கள் ரயில் போக்குவரத்து இன்றி கடுமையாக பாதிக்கப்பட்டனர்.இதை தொடர்ந்து மாவட்டங்களுக்கிடையேயான ரயில்சேவைக்கு அரசு அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே