இந்தியாவில் 2 லட்சத்துக்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு..!!

நாடு முழுவதும் தினசரி கோவிட் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், கடந்த 44 நாட்களில் 2வது முறையாக 2 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

முன்னதாக மே 24 பாதிப்பு நிலவரத்தில் 1.96 லட்சம் பேராக குறைந்திருந்தது.இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,59,459 பேர் கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 48 லட்சத்து 93 ஆயிரத்தை தாண்டியது.

ஒரேநாளில் 1,86,364 லட்சம் பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 2 கோடியே 75 லட்சத்து 55 ஆயிரத்தை கடந்தது. 23.43 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 3,18,895 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் தற்போது கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 90.34 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.16 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 8.5 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்தியாவில் நேற்று (மே 27) ஒரே நாளில் 20,70,508 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 33 கோடியே 90 லட்சத்து 39 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

இன்று (மே 28-ம் தேதி) காலை 10:10 மணி நிலவரப்படி உலகில் கோவிட் தொற்றால் 16 கோடியே 96 லட்சத்து 41 ஆயிரத்து 108 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 35 லட்சத்து 25 ஆயிரத்து 192 பேர் பலியாகினர். 15 கோடியே 13 லட்சத்து 40 ஆயிரத்து 880 பேர் மீண்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே