மதுரையில் கொரோனா தொற்று குறைந்துள்ளது – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

முதல்வரின் தீவிர நடவடிக்கையால் மதுரையில் 2-ம் இடத்தில் இருந்த கரோனா தொற்று தற்போது 6-ம் இடத்தில் உள்ளது. அதனால், மதுரை விரைவில் கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நோய்த் தடுப்பு நடவடிக்கையை தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு அதன் பின் அரசின் சார்பில் நிவாரண உதவிகளை பயனாளிகளுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் வினய்,மாநகராட்சி ஆணையாளர் விசாகன், சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வம், எஸ்.எஸ்.சரவணன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்

நிகழ்ச்சிக்குப் பின்னர் ஆர்.பி உதயகுமார் கூறியதாவது;

கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை முதல்வர் தொலைநோக்குப் பார்வையுடன் எடுத்து வருகிறார்.

தமிழகத்தில் கரோனா நோயாளிகளுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை, ஐ.சி.எம்.ஆர்.,படி மருந்துகளும், இந்திய ஆயுஷ் அமைச்சகம் வழிகாட்டுதல்படி கபசுர குடிநீர் உள்ளிட்ட சித்த மருத்துவங்களையும் முதல்வர் பரிந்துரையின் பேரில் வழங்கப்படுகிறது.

தொடர்ந்து இதுவரை இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகமான பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதுவரை 22 லட்சத்து 2 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதில் 1,99,749 தொற்று நோய் உள்ள நபர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் இதுவரை1,43,217 நபர்கள் குணமடைந்துள்ளனர்.

தற்போது 58,132 நபர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

இந்த நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை ஆனால் மருந்தே கண்டுபிடிக்காத இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களை அதிகமான குணப்படுத்திய மாநிலம் நம் தமிழகம்தான் என்று மத்திய அரசு மட்டுமல்லாது பல்வேறு தலை சிறந்த மருத்துவர்களும் பாராட்டி வருகின்றனர்

மதுரை மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் இதுவரை 9,302 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

இதில் 6, 448 பேர் குணமடைந்துள்ளனர் தற்போது 2,661 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் இந்த நோய் தொற்று 12 சதவீதம் மேலிருந்தது. சென்னைக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் இருந்தது.

முதல்வரின் தீவிர நடவடிக்கையின் பயனாக தற்போது மதுரையில் நோய்த் தொற்று படிப்படியாக 5 சதவீதமாக குறைந்து தற்பொழுது 6-ம் இடத்திற்கு வந்துள்ளது. மதுரை விரைவில் கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறும்.

அதேபோல் இதுவரை மதுரை மாவட்டத்தில் மட்டும் 2,479 காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டு உள்ளது.

இதில் 1,69,468 மக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 1,12,530 மக்களுக்கு சளி பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இந்த முகாமில் நோயின் தாக்கம் இருந்தால் அதற்கு ஏற்றார்போல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்லாது இந்த நோய்த் தொற்று உள்ளவர்களைக் கண்டறியும் பொழுது அவர்கள் சம்பந்தப்பட்டவர்களையும் அவருக்கும் இந்த பாதிப்பு உள்ளதா என்று கண்காணிக்கப்படுகிறது.

அதேபோல் அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் 1,937 படுக்கைகளும், தனியார் மருத்துவமனையில்591 படுக்கைகளும், கோவிட் கேர் சென்டரில் 4,000 படுக்கைகளும், ஆக மொத்தம் 6,528 படுக்கைடுகள் தற்போது உள்ளன

அதேபோல் வடபழஞ்சியில் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் 1000 படுக்கை வசதிகள் தற்போது தயார் நிலையில் உள்ளது

டெல்லிக்கு அடுத்தபடி தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை அதிகளவில் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது சென்னையில் பிளாஸ்மா வங்கி இருப்பதுபோல் மதுரையிலும் பிளாஸ்மா வங்கி அமைந்திட முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளோம்.

அதேபோல் 4,44 மரணங்களை மறைப்பதாக எதிர்க்கட்சியினர் கூறியுள்ளனர். அப்படி மறைக்க வேண்டிய அவசியம் இல்லை ஏனென்றால் இந்த 4,44 நபர்களுக்கு இணை நோய் இருந்துள்ளது அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக வந்து இறந்து போயுள்ளனர்.

ஆகவே அவர்களின் உடலைப் பரிசோதிக்கும் போது அவர்களுக்கு கரோனா தொற்று இருந்திருந்தால் கோவிட் கணக்கில் சேர்க்கலாமா என்று தமிழக பொது சுகாதார துணை இயக்குனர் வடிவேல் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

அந்தக் குழு தமிழகம் முழுவதும் ஆராய்ந்து இணை நோயினால் இறந்தவர்களுக்கு தொற்று இருந்தாலும் அவர்களை கோவிட் கணக்கில் சேர்க்க வேண்டும் என்றுஉலக சுகாதார துறை வழிகாட்டுதல்படி சுகாதாரத்துறை அறிவித்தது.

இதில் தேவையில்லாத பீதியை எதிர்க்கட்சிகள் கிளப்பியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே