கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை ???

உலகம் முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியே 77 லட்சமாக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் கோர முகத்தை காட்டி வருகிறது.

இந்நிலையில் உலகம் முழுவதும் இதுவரை 9 கோடியே 49 லட்சத்து 21 ஆயிரத்து 985 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 6 கோடியே 77 லட்சத்து 57 ஆயிரத்து 949 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் இதுவரை 20 லட்சத்து 29 ஆயிரத்து 632 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 2 கோடியே 51 லட்சத்து 34 ஆயிரத்து 404 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே