இந்தியாவில் 3 லட்சத்தை நெருங்கிய கொரோனா தொற்று..!!

இந்தியாவில் நேற்று (ஏப்.,20) ஒரே நாளில் 2,95,041 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியே 56 லட்சத்து 16 ஆயிரத்தை கடந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் 1.67 லட்சம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 32 லட்சத்து 76 ஆயிரத்தை தாண்டியது.

21.57 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கொரோனா பாதித்த 2,023 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 1,82,553 ஆக உயர்ந்துள்ளது.

இதன்மூலம் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 85.01 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.17 ஆகவும் உள்ளது.

மேலும், தற்போது 13.82 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.தடுப்பூசிசோதனைகள்இந்தியாவில் நேற்று (ஏப்.,20) ஒரே நாளில் 16,39,357 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.

இதுவரை இந்தியாவில் 27 கோடியே 10 லட்சத்து 53 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

உலக பாதிப்பு

இன்று (ஏப்ரல் 21-ம் தேதி) காலை 10:00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 14 கோடியே 35 லட்சத்து 56 ஆயிரத்து 326 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 லட்சத்து 57 ஆயிரத்து 781 பேர் பலியாகினர். 12 கோடியே 19 லட்சத்து 31 ஆயிரத்து 805 பேர் மீண்டனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே