5 மாநிலங்களில் அதிகரிக்கும் கரோனா; மகாராஷ்டிரா 17,864, கேரளா 1,970, பஞ்சாப் 1,463

மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத், தமிழகம் ஆகிய மாநிலங்களில் கோவிட் தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது.

நாடுமுழுவதும் கரோனா பரவலை கட்டப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக ஏறக்குறைய ஓராண்டு ஆகும் நிலையில் பல மாநிலங்களில் பரவல் கட்டுக்குள் வந்து. இயல்பு நிலையும் திரும்பி வருகிறது.

இந்தநிலையில் கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழகம் மத்தியபிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்ராவில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

மகாராஷ்டிராவில் வார பாதிப்பு 18 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தினசரி கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ள மாநிலங்களில், ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை அதிகரிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து கரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

மகாராஷ்டிராவி, நாக்பூர், அமராவதி, தானே உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா பாதித்த பகுதிகளில் ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத், தமிழகம் ஆகிய மாநிலங்களில் கோவிட் தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 28,903 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 71.10 சதவீதம் பேர், மேற்கண்ட 5 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
இந்தியாவில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்று 1,10,45,284-ஐ தொட்டது. இது 96.56 சதவீதம். கடந்த 24 மணி நேரத்தில் 188 பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிராவில் மட்டும் 17,864 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. கேரளாவில் 1,970 பேருக்கும், பஞ்சாப்பில் 1,463 பேருக்கும் புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே