உலகளவில் 27 லட்சத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு

உலக அளவில் கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கரோனா நோய்த்தொற்று இன்று உலகம் முழுவதும் 210-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதிவேகமாக பரவி வரும் நோய்த்தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தொடர்ந்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், நோய்த்தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது.

இந்த நிலையில் உலக அளவில் நோய்த்தொற்றுக்கு இதுவரை 27,25,390 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 1,91,055-ஆக உயர்ந்துள்ளது.

அதே நேரத்தில் 7,45,819 பேர் நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடி வரும் கரோனாவுக்கு வியாழக்கிழமை ஒரே நாளில் புதிதாக 30,812 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 86 ஆயிரத்து 709 -ஆக அதிகரித்துள்ளது.

வியாழக்கிழமை ஒரே நாளில் 2,292 பேர் பலியாகி உள்ளனர்.

இதனால் அங்கு நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50,243 ஆக உயர்ந்துள்ளது அமெரிக்க வாழ் மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே