அண்ணா பல்கலைக்கழக முதுநிலை மாணவர்கள் 6 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடியில் கரோனா பரவல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சென்னை ஐஐடியில் ஆய்வு செய்த சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அனைத்து மாணவர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் பல்கலைக்கழக வளாகங்கள் மற்றும் விடுதிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதில் சென்னை மாநகராட்சி மருத்துவக்குழு நேற்று அண்ணா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் 6 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று உறுதியான 3 மாணவர்கள், 3 மாணவிகளுக்கு எந்த அறிகுறிகளும் இல்லை என்றும்; அவர்கள் கிங்ஸ் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அண்ணா பல்கலைக்கழக டீன் இனியன் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே