தமிழ்நாட்டில் இன்று (செப் 02) 5990 பேருக்கு கொரோனா; 98 பேர் உயிரிழப்பு..!

தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 5,990 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

மாநிலத்தில் புதிதாக 5,990 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,39,959 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 1,025 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய அறிவிப்பில் மேலும் 98 பேர் உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரேநாளில் மேலும் 5,838 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே