இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,431 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 318 ஆக பதிவாகியுள்ளது. இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,38,94,312 ஆக உள்ளது.

  • கடந்த 24 மணி நேரத்தில் 22,431 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 4 ஆயிரம் அதிகம்.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,38,94,312 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 318 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,49,856 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • தொற்றில் இருந்து ஒரே நாளில் 24,602 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,32,00,258 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,44,198 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • நாடு முழுவதும் இதுவரை 92,63,68,608 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 43,09,525 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே