புதுச்சேரியில் கரோனா தொற்று 41 ஆயிரத்தைத் தாண்டியது; புதிதாக 137 பேர் பாதிப்பு

புதுச்சேரியில் கரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தொற்று பாதிப்பு 41 ஆயிரத்தைக் கடந்துள்ளது. புதிதாக 137 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தில் 2,020 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 92 பேருக்கும், காரைக்காலில் 37 பேருக்கும் , மாஹேவில் 8 பேருக்கும் என மொத்தம் 137 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்றைய தினம் ஏனாமில் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை.

கரோனா உயிரிழப்பு இல்லை. இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 680 ஆகவும், இறப்பு விகிதம் 1.65 ஆகவும் உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 41 ஆயிரத்து 101 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 274 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 633 பேரும் என 907 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று 76 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 39 ஆயிரத்து 514 ஆக உள்ளது. புதுச்சேரி மாநிலம் முழுவதும் இதுவரை 6 லட்சத்து 65 ஆயிரத்து 762 பரிசோதனைகள் செய்யப்பட்டன. இவற்றில் 6 லட்சத்து 16 ஆயிரத்து 606 பரிசோதனைகளுக்குத் தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது.

இதுவரை சுகாதாரப் பணியாளர்கள் 24 ஆயிரத்து 950 (52 நாட்கள்), முன்களப் பணியாளர்கள் 10 ஆயிரத்து 467 (40 நாட்கள்), பொதுமக்கள் 27 ஆயிரத்து 382 பேர் (24 நாட்கள்) என மொத்தம் 62 ஆயிரத்து 799 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.’’

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே