மகாராஷ்டிர அமைச்சர் ஆதித்ய தாக்கரேவிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நாடு முழுவதும் மீண்டும் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.

மகாராஷ்டிரம், கேரளம், பஞ்சாப் மற்றும் தில்லி போன்ற மாநிலங்களில் தொற்று பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிர அமைச்சர் ஆதித்ய தாக்கரேவிற்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் அவர், “கரோனா அறிகுறிகளுடன் காணப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கரோனா பரிசோதனையை மேற்கொள்ள கேட்டுக் கொள்கிறேன்.

அனைவரும் கரோனா முன்னெச்சரிக்கை விதிகளை அவசியம் கடைபிடிக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே