நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் 51 பேருக்கு கரோனா: வட்டார போக்குவரத்து அலுவலகம் மூடல்

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 51 பேருக்கு கரோனா பாதிப்பு புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. கரோனா காரணமாக வட்டார போக்குவரத்து அலுவலகம் 4 நாட்களுக்கு மூடப்பட்டது.

மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்குமுன்பு வரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் இருந்துவந்த நிலையில் தற்போது நாளுக்குநாள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நேற்று 31 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று 51 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அதில் திருநெல்வேலி மாநகர பகுதியில் மட்டும் 36 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே திருநெல்வேலி என்.ஜி.ஓ. காலனியிலுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த அலுவலகத்தை வரும் 3-ம் தேதி வரை மூடுவதற்கு மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

தொடர்பாக அந்த அலுவலகமுன் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அதில், மேலப்பாளையம் மண்டலத்துக்கு உட்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதால், நோய் கிருமி தொற்று நீக்கம் செய்யும் பொருட்டு, கிருமி நாசினி மருந்து தெளிக்க இருப்பதால், வட்டார போக்குவரத்து அலுவலகம் 31.3.2021 முதல் 3.4.2021 வரை மூடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே