கொரோனா : BCCI சார்பில் ரூ.51 கோடி நிதியுதவி

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக BCCI ரூ.51 கோடி நிதியுதவி அறிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்று தற்போது இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை.

இதையடுத்து கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவுக்கு இதுவரை 918 பாதிக்கப்பட்ட நிலையில் 19 பேர் பலியாகியுள்ளனர். 80 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக மக்கள் நிதியுதவி அளிக்கலாம் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதையடுத்து பல்வேறு தரப்பினர் நிதியுதவி அளித்து வருகின்றனர். 

அந்த வகையில் பி.சி.சி.ஐ. சார்பில் ரூ.51 கோடி நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும் ரூ.52 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.

அதில் ரூ. 21 லட்சம் உத்தரபிரதேச முதல்வர் நிவாரண நிதியாகவும், மற்றொரு ரூ. 31 லட்சம் பிரதமர் நிவாரண நிதியாகவும் அவர் வழங்கியுள்ளார்.

இதுகுறித்து ரெய்னா தனது டிவிட்டரில், கொரோனாவை வீழ்த்த நாம் நம்மால் முடிந்த உதவிகளை செய்யும் நேரம் இது. நான் ரூ. 52 லட்சத்தை கொரோனாவுக்கு எதிரான போராட்டத்துக்காக வழங்குகிறேன். நீங்களும் உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். ஜெய்ஹிந்த். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே