மக்கள் பணிகளை தொடர்ந்து செய்யுங்கள்..; நடிகர் விஜய் அறிவுரை..!!

மக்கள் பணிகளை தொடர்ந்து செய்யுங்கள் என தனது இயக்க நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் உறுப்பினர் சேர்க்கையில் கவனம் கொள்ளுங்கள் என விஜய் அறிவுறுத்தியிருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி உள்பட புதிதாக இணைந்த மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் சென்னை பனையூரில் இருக்கும் அலுவலகத்தில் நடிகர் விஜய் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் மக்கள் பணிகளை தொடர்ந்து செய்யுங்கள்.

கடன் வாங்காமல் உதவிகளை செய்யுங்கள்.

வழக்கம் போல் தேவையான உதவிகள் என்னிடம் இருந்து வரும். செய்யும் தொழிலில் கவனம் செலுத்தி பெற்றோரை நல்லபடியாக கவனித்து கொள்ளுங்கள்.

மக்கள் இயக்க செயல்பாடுகள், உறுப்பினர்கள் சேர்க்கை குறித்தும் அவர் ஆலோசனை நடத்தியுள்ளார்.

உறுப்பினர் சேர்க்கை குறித்து விஜய் பேசியுள்ளதை பார்க்கையில் அவர் நிச்சயம் அரசியலுக்கு வரும் எண்ணத்துடன் இருப்பதாகவே தெரிகிறது.

விஜய்யின் இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளார்கள்.

அடிமட்ட அளவில் இறங்கி வார்டு முதல் அனைத்து தரப்பிலும் உறுப்பினர்களை சேர்க்க விஜய் அறிவுறுத்தியுள்ளதால் ரசிகர்களுக்கு அது மேலும் ஊக்குவிப்பை கொடுத்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே