புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார், சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.
காமராஜ்நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த வைத்திலிங்கம், மக்களவை தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானார்.
இதனால் காலியாக இருந்த காமராஜ் நகர் தொகுதிக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜான்குமார் வெற்றிபெற்றார்.
இந்நிலையில் புதுச்சேரி சட்டமன்றத்தில் ஜான்குமார் முறைப்படி சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.